×

நீலகிரி மாவட்டத்தில் ஜமீன்தார்கள் ஆக்கிரமித்த 17 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஜமீன்தார்கள் ஆக்கிரமித்திருந்த 17 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு வனத்துறையுடன் சேர்க்கப்பட்டது. இது குறித்து தமிழக வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நிலம்பூர் கோவிலகம், நெல்லியாளம் ராணி, நடுவத்மனை மற்றும் மைசூர் ஜமீன்தார்களின் வசமிருந்து அரசால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் அபிவிருத்தி செய்யாத வன நிலங்களை அளவை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 17 ஆயிரம் ஏக்கர் வன நிலங்கள் என கண்டறியப்பட்டன.

இந்தப் பகுதியை தமிழ்நாடு வனச் சட்டம் பிரிவு 16ன் கீழ் காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்வது தொடர்பான பணி குறித்த காணொலி ஆய்வுக் கூட்டம் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்ய ஏதுவாக துரித நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

Tags : district ,Nilgiris ,land ,Zamindars , Nilgiri District, Zamindars, Land Reclamation
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்