முதல்வர் எடப்பாடி திடீர் சேலம் பயணம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் திடீரென சேலம் புறப்பட்டு சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி வழியாக சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டு சென்றார். கொரோனா காரணமாக, முதல்வருக்கு வழியில் எந்தவித வரவேற்பும் செய்ய வேண்டாம் என்று கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனது, சொந்த மாவட்டமான சேலத்தில் இரண்டு நாட்கள் தங்கி இருக்கும் முதல்வர் எடப்பாடி, நாளை  மதியம் கார் மூலம் புறப்பட்டு சென்னை வர திட்டமிட்டுள்ளார்.

Related Stories:

>