×

சிறை கைதி சாவு

சென்னை: ஆலந்தூர் கணேஷ் நகரை சேர்ந்த சரவணன் மனைவி சரஸ்வதி (48). இவர், கடந்த பிப்ரவரி 18ம் தேதி, தனது மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, மன அழுத்தம் காரணமாக மாமியாரை கொலை செய்தது தெரியவந்தது.   இதையடுத்து சரஸ்வதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சரியில்லாததால் கடந்த 20ம்தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags : Death ,prisoner , Death , prisoner
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு...