×

5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக தமிழக உரிமைகளை காப்பதில் ஜெயலலிதா வழியில் செயலாற்றும்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக ஆட்சி அமைந்து 4ம் ஆண்டு நிறைவுற்று இன்று (23ம் தேதி) ஐந்தாம் ஆண்டு தொடங்குகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருந்து மக்களுக்கு தொண்டாற்றும். ஜெயலலிதாவின் நல்லாசியோடு அதிமுகவை தொடர்ந்து வழி நடத்தி வருகிறோம். மத்திய அரசின் நல் ஆளுமை திறனுக்கான தர வரிசையில் தமிழகம் முதலிடம், ரூ.11,250 கோடியில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டம்,

முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8,835 கோடிக்கான முதலீடுகள் ஈர்ப்பு, துணை முதல்வர் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் மூலம் ரூ.750 கோடியில் முதலீடு, உள்ளாட்சி நிர்வாக பணிகளில் திறம்பட செயல்பட்டு மத்திய அரசின் பாராட்டை பெற்றிருப்பது, 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றிருப்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் அணிவகுத்து நிற்கின்றன.

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக அரசு, தமிழ்நாட்டு உரிமைகளை காப்பதிலும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஜெயலலிதா வழியிலேயே திறம்பட செயலாற்றும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் உண்மை தொண்டர்களாகிய அதிமுக தொண்டர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பணியாற்றி, அதிமுகவுக்கும், அரசுக்கும் புகழ் சேர்த்து தொடர் வெற்றிபெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.Tags : Jayalalithaa ,Modi ,L. Murugan ,Tamil Nadu ,The Press Department ,BJP , AIIMS, Tamil Rights, Jayalalithaa, EPS, OPS
× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த...