×

இந்தியாவில் நேற்று... பிளஸ் - 6,088 மைனஸ் - 148: வென்றவர்கள் எண்ணிக்கை 41%

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக 6,088 பேர் பாதித்தனர். 148 பேர் இறந்தனர். குணமானவர்கள் எண்ணிக்கை 40.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. 24 மணி நேர அடிப்படையில் இந்த புள்ளி விவரம் வெளியிடப்படுகிறது. நேற்று அது வெளியிட்ட அறிக்கை: நாட்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 447. இவர்களில் 66,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,533 பேர் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். குணமானவர்கள் எண்ணிக்கை 40.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.

மேலும், வியாழன் காலை முதல் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதித்த 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 64 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து குஜராத்தில் 24, டெல்லி 18, உத்தரப் பிரதேசம் 11, தமிழ்நாடு 7, மேற்கு வங்கம் 6, தெலங்கானா 5, ராஜஸ்தான் 4, மத்தியப் பிரதேசம் 3, ஜம்மு காஷ்மீர் 2, பீகார், ஒடிசா, அரியானா மற்றும் பஞ்சாபில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதன் மூலம், நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3583 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் குணமான கொரோனா நோயாளிகளின் சதவீதம், சில நாடுகளில் 50 சதவீதம் கூட உள்ளது. இந்தியாவில் கடந்த வாரத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 36 சதவீதமாக இருந்தது. இது தற்போது 41 சதவீதத்தை எட்டியுள்ளது.


Tags : India ,winners , Corona, curfew, corona virus
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...