ஏலேய்... சீனாக்கார பயலே லேசுல விட மாட்டோம்ல...அமெரிக்க அதிபர் டிரம்ப் நறநற

வாஷிங்டன்: ‘‘உயிர் பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்தது என்பது உறுதி. இந்த பிரச்னையை அமெரிக்கா எளிதில் விடாது,’’ என்று அதிபர் டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.  அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில், ஆப்பிரிக்கா - அமெரிக்க தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்,  அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் உருவானது என்பது உறுதி. அமெரிக்காவும் சீனாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த மை கூட இன்னும் காயவில்லை.

திடீரென இந்த கொரோனா பரவியது. இந்த பிரச்னையை அமெரிக்கா எளிதாக எடுத்துக் கொள்ளாது. இப்பிரச்னையை லேசாக விட மாட்டோம்.’’ என்றார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால்தான், தனது நாடு சீரழிந்து வருவதாக கடந்த பல வாரங்களாகவே டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். சீனாவின் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆளும் குடியரசு கட்சியின் எம்பி.க்்கள் கூட, டிரம்ப்புக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

Related Stories:

>