×

சில்லி பாயின்ட்…

* ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 போட்டித் தொடர், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* 60 வயதுக்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் போட்டி அரங்குக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
*  ஒவ்வொரு ஆண்டும் சில நாட்களுக்கு ஊரடங்கை கடைப்பிடிக்கலாம் என நினைக்கிறேன். இயற்கைக்கும், இந்த உலகுக்கும் அது பலவித நன்மைகளை கொடுக்கும் என்று கிரேக்க டென்னிஸ் நட்சத்திரம் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார்.
* இந்திய விளையாட்டு ஆணைய மையங்களில் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் சொந்த பொறுப்பில் செயல்படுவதாகப் படிவத்தில் கையொப்பம் இட வேண்டும் என சாய் வலியுறுத்தி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.Tags : Australia ,ICC Men's World Cup T20 Tournament , Australia, ICC Men's World Cup T20, Corona, Curfew
× RELATED கொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான...