×

மானாமதுரை வாரச்சந்தையில் சமூக இடைவெளியை மறந்து குவிந்த மக்கள்: நோய் தொற்று அபாயம்

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தை மூடப்பட்ட நிலையில் வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக பொருட்களை வாங்கினர். போலீசார், காதாரத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால் மீண்டும் நோய் தொற்று  அபாயம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரையில் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள வாரச்சந்தை வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் காய்கறி சந்தை நடைபெறும்.

இந்த சந்தையில் ஐநூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தாங்கள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்வர். கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த வாரச்சந்தை மூடப்பட்டது. மானாமதுரை நகர் முழுவதும் தெருக்களிலுள்ள கடைகள் சமூக இடைவெளியுடன் கடந்த 5 வாரங்களாக நடந்து வந்த நிலையில், வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட கடைகளில் நேற்று போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்து கொண்டு மக்கள் காய்கறி வாங்கி சென்றனர். பலர் முகக்கவசம் அணியாமல் வந்தனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

தினசரி கடைகளில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் பொருட்கள் வாங்க போலீசார், சுகாதாரத்துரையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Manamadurai , Manamadurai weekend, social space, people
× RELATED குடிநீர் தட்டுப்பாட்டால் சமூக இடைவெளியை மறந்த மக்கள்