×

பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது ; செயற்கைகோள்கள், விண்கலங்களை பாதிப்பு ஏற்படும் என தகவல்

வாஷிங்டன் :  பூமியின் காந்தப்புலம் 10 சதவீதம் பலவீனமடைந்தால் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டு உள்ளது. பூமியின் காந்தப்புலம் சூரிய கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கிறது, ஆனால் தற்போதைய ஆய்வின் படி, பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம், சராசரியாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அதன் வலிமையில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை இழந்துள்ளது தெரியவந்து உள்ளது. காந்தப்புலம் பலவீனமடைவதால் பூமியை சுற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இதனிடையே ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு நீளமான தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மையில் விரைவான சுருக்கம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தில் ஒரு பெரிய மற்றும் விரைவான சுருக்கம் காணப்படுகிறது, அதேபோல் இப்பகுதி வளர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.மேற்கண்ட தகவல்கள் ஸ்வர்ம் செயற்கைக்கோள் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது. ஸ்வர்ம் செயற்கைக்கோள்கள் பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைக்கும் பல்வேறு காந்த சமிக்ஞைகளை அடையாளம் கண்டு அளவிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


Tags : Earth , Earth, magnetic field, weakness, satellites, spacecraft, impact
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...