×

கூடலூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான 17,014.43 ஏக்கர் வன நிலங்கள் மீட்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நிலம்பூர் கோவிலகம், நெல்லியாளம் ராணி, நடுவத்தமனை மற்றும் மைசூர் ஜமீன்தாரர்களின் வசமிருந்து அரசால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் அபிவிருந்து செய்யாத வன நிலங்களை அளவை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 17,014.43 ஏக்கர்(107 பகுதிகள்) வன நிலங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியினை தமிழ்நாடு வனச்சட்டம் பிரிவு 16 அ-ன் கீழ் காப்புக்காடுகளை அறிவிக்கை செய்வதில் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றம் தொடர்பான காணொலி ஆய்வுக்கூட்டம் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) முனைவர் பெ.துரைராசு, இ.வ.ப., அவர்களால் இன்று (22.05.2020) நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தொடர்புடைய தலைமையக அலுவலர்கள் மற்றும் கோவை, வனமண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர், கூடலூர், வன நிர்ணய அலுவலர் மற்றும் கள அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்ய எதுவாக துரித நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

Tags : Cuddalore ,area ,forest land , Cuddalore, Government, Forest Lands, Recovery
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு