×

முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது : கமலஹாசன் ட்வீட்

சென்னை : அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு ஆண்டு குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை துவக்கினர். 99 நாட்களை கடந்த நிலையில் 100வது நாளில் போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.  இந்த துப்பாக்கி சூட்டில்  13 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒரு சிலர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கமல்ஹாசன் ட்வீட்

இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : government ,Kamal Haasan ,employer ,subsidiary , Tuticorin, firing, rulers, robbery, murder, Stalin, reports
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...