×

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு துவங்கியது

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது. இப்பணி வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி, முதுமலை, தெப்பக்காடு ஆகிய 3 சரகங்களில் உள்ள 32 தேர்வு செய்யப்பட்ட மைய பகுதிகளில் இருந்து இப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

வன ஊழியர்கள் கல்லூரி மாணவர்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்களுக்கு தெப்பக்காட்டில் பயிற்சியும், அதற்கான உபகரணங்களும் அளிக்கப்பட்டது. உயிரினங்களின் நேரடி காட்சிகள், தடயங்கள், எச்சங்கள் போன்றவற்றின் மூலமாக நடைபெறும் கணக்கெடுப்பு பணிகளில் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அளிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Mudumalai Tiger Reserve , Wildlife survey, started, Mudumalai Tiger Reserve
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...