×

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைச் சாலையில் யானைகள் உலா

குன்னூர்: வாகனங்களின் இயக்கம் பெருமளவு குறைந்துள்ளதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைச் சாலையில் யானைகள் அடிக்கடி உலா வருகின்றன. ஊரடங்கால் நீலகிரியில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கில் தளர்வு அளிக்ககப்பட்ட போதிலும் பொது போக்குவரத்திற்கான பஸ், ரயில்கள் இயங்காததால் பொதுமக்களின் போக்குவரத்து  முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலைச்சாலையில் வாகனங்கள் இல்லாமல் அமைதியான சூழல் நிலவி வருகிறது. குன்னூர் பர்லியாறு பகுதியில் பலா பழ சீசன் என்பதால் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளன. தற்போது வாகனங்கள் இல்லாததால் யானைகள் மகிழ்ச்சியாக சாலையில் அடிக்கடி உலா வருகின்றன. நேற்று 2 குட்டி உள்ளிட்ட 4 யானைகள் குன்னூர் மலைச் சாலையை கடந்து சென்றன. கோடை காலம் வரை வனப்பகுதிக்குள் உள்ள வன விலங்குகளுக்கு குடி நீர் வழங்கி அவை வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : mountain road ,Coonoor-Mettupalayam ,Elephants , Elephants roam , Coonoor-Mettupalayam ,mountain road
× RELATED திம்பம் மலைப்பாதையில் சாலையோரம்...