×

த்ரிஷ்யம் 2ம் பாகம்: மோகன்லால் தீவிரம்

2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் த்ரிஷ்யம். ஜீது ஜோசப் இயக்கி இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத் உள்பட பலர் நடித்திருந்தார்கள். மலையாள சினிமா சரித்திரத்தில் 100 கோடி வசூல் சாதனை படைத்த முதல் படம். அதன்பிறகு இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கமல்ஹாசன் நடித்தார்.தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளது. த்ரிஷ்யம் படக்குழு மோகன்லாலுடன் இணைந்து ராம் என்ற படத்தை தயாரிக்க இருந்தது. இந்தப் படத்தை வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டிருந்தார்கள். தற்போது கொரோன வைரஸ் பிரச்சினையால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் ராம் படத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கொண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளனர்.

இதில் த்ரிஷ்யம் படத்தில் நடித்த மீனா, ஆஷா சரத் உள்ளிட்ட நடிகர்கள் அப்படியே நடிக்கிறார்கள். கூடுதலாக சில கேரக்டர்கள் சேர்க்கப்படுகிறது. த்ரிஷ்யம் கிராம பின்னணியில் உருவாக்கப்பட்டது. 2ம் பாகம் நகர்புற பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சர்வசக்தி படைத்த போலீஸ் மூளையை ஒரு அப்பாவின் மூளை எப்படி முறியடிக்கிறது என்கிற கான்செப்ட்தான் இந்த படத்திலும் மைய கருவாக இருக்கும் என்கிறார்கள். கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்புகள் தொடங்குகிறது.



Tags : Mohanlal , Trishyam Part 2, Mohanlal
× RELATED சிவராத்திரியில் கண்ணப்பா பர்ஸ்ட் லுக் ரிலீஸ்