×

டோலிவுட்டில் படப்பிடிப்புகள் நடத்துவது எப்படி? சிரஞ்சீவி வீட்டில் திரையுலகினர் ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக திரையுலகம் முடங்கிக் கிடக்கிறது. குறிப்பாக தெலுங்கு திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சுமார் ஆயிரம் கோடி வரை இழப்பை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் தெலுங்கு சினிமா படப்பிடிப்புக்கு ஆந்திர அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் தெலுங்கு முன்னணியினர், ஆந்திர திரைப்படத்துறை அமைச்சர் தலசனி னிவாசுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நாகார்ஜுனா, அல்லு அரவிந்த், இயக்குனர் ராஜமவுலி, தில்ராஜு உள்பட பலர் கலந்த கொண்டனர்.

கூட்டத்தில் வருங்காலத்தில் படப்பிடிப்பை எப்படி நடத்துவது, பட வெளியீட்டை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இதில் படப்பிடிப்புகளை அரசின் வழிகாட்டுதலை தீவிரமாக கடைப்பிடித்து நடத்துவது. உடனடியாக பாதியில் நிற்கும் படங்களின் படப்பிடிப்பை நடத்தி முடிப்பது. அதன் பிறகு புதிய படங்களை தொடங்குவதற்கு முறையான வழிமுறைகளை உருவாக்குவது மற்றும் வெளியிடப்படும் படங்களை வகைப்படுத்துவது போன்ற பணிகளை செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது.  விரைவில் தெலுங்கு சினிமாவின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளோடும் பேசி அரசிடம் அறிக்கை சமர்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.



Tags : filmmakers ,home ,Chiranjeevi , Tollywood, Films, Chiranjeevi, filmmakers
× RELATED புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை...