×

கோர்ட் வசனங்களை பேச சிரமப்பட்டேன்: -ஜோதிகா

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் வருகிற 29ம் தேதி இணையத்தில் வெளிவருகிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பொன்மகள் வந்தாள் என் கேரியரில் முக்கியமான படம். இதற்கு முன்பு நான் போலீசாக நடித்திருந்தேன். போலீசாக நடிப்பதுதான் சிரமமானது என்று கருதி இருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் வக்கீலாக நடித்த பிறகு எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். எனக்கு போலீசாக நடிப்பதை விட வக்கீலாக நடிப்பதுதான் சிரமம். வட இந்திய பெண்ணான எனக்கு பக்கம் பக்கமாய் கோர்ட் வசனங்களை பேசுவது அத்தனை சிரமமாக இருந்தது.

என்றாலும் கடுமையாக பயிற்சி எடுத்து நடித்தேன். நானே டப்பிங்கும் பேசி இருக்கிறேன். 36 வயதினிலே, மகளிர் மட்டும், ராட்சசி படங்கள் போன்று இதுவும் ஒரு சமூக பிரச்சினையை பேசுகிற படம். கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் போன்ற அனுபவம் மிக்கவர்களுடன் நடித்தது நல்ல சினிமாவை கற்க வாய்ப்பாக அமைந்தது. 20 ஆண்டுகள் கழித்தும் எனது  சில படங்கள் குறித்து பேச வேண்டும். அதை மனதில் கொண்டே படங்கள் ஒப்புக் கொள்கிறேன். சில படங்கள் வெற்றியடையும், சில படங்கள் வெற்றியடையாது.  ஆனால் எனது பயணம் இதே வெளியில் தொடர்ந்து கொண்டே இருக்கும். 


Tags : Court , Court verses, Jodhika
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...