×

ஹாரர் த்ரில்லர் படத்தில் அர்ஜூன், ஜீவா

ஸ்ட்ராபெரி, ஆருத்ரா படங்களை இயக்கிய பாடலாசிரியர் பா.விஜய் அடுத்து இயக்கும் படம் மேதாவி. இதில் அர்ஜூன், ஜீவா, ராஷிகண்ணா, தினா, ரோபோ சங்கர் மகள் இந்துஜா, மகேந்திரன், அழகம் பெருமாள் ரோகினி நடிக்கிறார்கள்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கிறார். “இது பக்கா ஹாரர் த்ரில்லர் படம். முற்றிலும் வித்தியாசமான கதை களத்தை கொண்டது. படம் தொடங்குவதற்கு எல்லா விதத்திலும் தயாராக இருக்கிறோம். கொரோனா ஊடரங்கு முடிந்த பிறகு அரசின் வழிகாட்டுதல்படி மருத்துவ பாதுகாப்பு, சமூக விலகலுடன் படப்பிடிப்பு நடக்கும். அர்ஜூனும், ஜீவாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம். என்றார் பா.விஜய்.



Tags : Arjun ,Jeeva , Arjun , Jeeva , Horror Thriller
× RELATED தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்காவில்...