×

தலைமை ஆசிரியர்களுக்கு இ-பாஸ் விண்ணப்பித்த மாணவர் விபரம் அனுப்பி வைக்க உத்தரவு

திருவள்ளூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், வெளி மாவட்டங்களில் சிக்கியவர்களின் இ - பாஸ் விபரம் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு தேர்வு உள்ளிட்ட பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில், ஏராளமான மாணவர்கள், வேறு ஊர்களில் உள்ளனர். மாவட்டம் விட்டு, மாவட்டம் வர, தற்போது இ - பாஸ் பெற வேண்டியுள்ளது. இதனால், அந்த மாணவர்களின் விபரம் சேகரித்து, இ -பாஸ் பெற விண்ணப்பிக்க, தலைமை ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு அனுமதி பெறுவது, மாணவர் படிக்கும் மாவட்டத்துக்கு அழைத்து வர போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக, இ - பாஸ் விண்ணப்பித்த மாணவர்களின் விபரங்களை அனுப்பிவைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.   



Tags : student ,E-Pass ,Headmasters , Headmasters, e-Pass Application, Student Profile
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...