×

மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்பட 11 இடங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு

திருப்போரூர்: உச்சநீதிமன்ற தடை உத்தரவை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை, திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையொட்டி, கடந்த முறை டாஸ்மாக் கடைகள் திறந்தபோது, சென்னைவாசிகள் பலர் கார், பைக் ஆகியவற்றில் புறநகர் பகுதியான திருப்போரூர், வெங்களேரி, கொட்டமேடு, வெங்கூர், வடநெம்மேலி, கோவளம், மாமல்லபுரம், பூஞ்சேரி, திருக்கழுக்குன்றம்  போன்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் கிராமங்களில் மது வாங்க கட்டுக் கடங்காத கூட்டம் சேர்ந்தது.

இதனால், மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி சுந்தரவதனம் அனுப்பிய பரிந்துரையின்படி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், கலெக்டர் ஜான்லூயிஸ் ஆகியோர் மாமல்லபுரம் காவல் கோட்டத்தில் அடங்கிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து நாவலூர், படூர், கேளம்பாக்கம், கோவளம், மாம்பாக்கம், வடநெம்மேலி, திருப்போரூர், வெங்கூர், கொட்டமேடு, வெங்களேரி, மாமல்லபுரம், பூஞ்சேரி, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள 34 கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

இதனை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகஅரசு மாமல்லபுரம், பூஞ்சேரி, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள 11 கடைகளை திறக்க உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, மேற்கண்ட பகுதிகளில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. நாவலூர், படூர், தாழம்பூர், மாம்பாக்கம், பொன்மார், கண்டிகை, திருப்போரூர், ஆலத்தூர், கொட்டமேடு, கோவளம், வடநெம்மேலி ஆகிய இடங்களில் உள்ள 23 கடைகள் மூடப்பட்டிருக்கும்.Tags : stores ,Mamallapuram TASMAC ,locations ,Mamallapuram , Mamallapuram, Tirukkuralikulam, Tasmak Stores
× RELATED கடைகளில் கொள்ளை