×

வாகன விபத்தில் கணவன், மனைவி பலி

பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த பள்ள மொளச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி எஸ்தர் (45). இவரது மனைவி தங்கராணி (36). ஆரனேரி கிராமத்தில் காய்கறி கடை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் காலை அந்தோணி எஸ்தர், மனைவி தங்கராணியுடன் பைக்கில் ஆரனேரிக்கு புறப்பட்டார். மாம்பாக்கம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த பைக், அந்தோணி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் கீழே விழுந்த தங்கராணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அந்தோணி எஸ்தர் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த அட்சய பிரசாத் (24) ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து பெரும்புதூா் போலீசார், 2 பேரையும் மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, அந்தோணி எஸ்தர் பரிதாபமாக இறந்தார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.Tags : vehicle accident , Husband , wife ,killed , vehicle accident
× RELATED ஜோலார்பேட்டையில் கணவனை கொன்ற மனைவி கைது