×

குடும்ப வன்முறை... கொலை.... விபத்து... நாட்டை நரகமாக்கிய ‘பாட்டில் சொர்க்கம்’

சென்னை: ஏறக்குறைய எல்லாவற்றையும் பறிகொடுத்த நிலையில்தான் பல குடும்பங்கள் இருக்கின்றன. பாதி வயிறு கூட நிரம்பாமல், ஏழை குடும்பங்கள் பட்டினியால் பரிதவிக்கின்றன. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நிலை இது. ஆனால், டாஸ்மாக் கடை திறந்ததும் பல குடும்பங்களின் நிம்மதியே பறிபோய் விட்டது. குடும்ப வன்முறைகளும், கொலை உள்ளிட்ட குற்றங்களும் தலைதூக்கி விட்டது. குற்றச்சம்பவங்கள் 6 மடங்கு அதிகரித்து விட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 வழக்கமாகவே ஏதோ ஒரு காரணத்தால் குடும்பங்களில் தகராறு ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் குடிமகன்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி விட்டன. தமிழகத்தில் சராசரியாக தினமும் குடும்ப வன்முறை, அடிதடி, விபத்து என 600 வழக்குகள் பதிவாகும்.

பல நாட்கள் இந்த எண்ணிக்கை குறைந்தும் இருக்கும். விபத்துகளுக்கு குடிப்பழக்கமே மிக முக்கிய காரணமாக இருந்ததை சில புள்ளி விவரங்கள் நிரூபித்துள்ளன. இந்த நிலையில்தான், கொரோனா ஊரடங்கு மார்ச் 25ம் தேதி அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.   இதனால், குடிமகன்களுக்கு ஏக வருத்தம். சொந்தமாக சாராயம் காய்ச்சும் அளவுக்கு மூளையை கசக்கிப் பிழிய தொடங்கினர். ஆனாலும், இல்லத்தரசிகளுக்கு பணக் கஷ்டத்திலும் ஒரு மன நிம்மதி இருக்கவே செய்தது. நல்ல வேளை, கணவர் குடிக்கவில்லை என்பதுதான் அது. அதோடு, வாகன போக்குவரத்து முடங்கியதால் விபத்துக்கள் எண்ணிக்கையும் குறைந்தது.

மருத்துவமனைகளில் 150 முதல் 160 விபத்து வழக்குகள் மட்டுமே பதிவாகின. சாதாரண நாட்களில் பதிவாகும் 600 வழக்குகளின் எண்ணிக்கை ஊரடங்கு நேரத்தில் 125ஆக குறைந்தது. மே மாதம் 1ம் தேதி 127 அடிதடி வழக்குகளும் 150 விபத்து வழக்குகளும் மட்டுமே பதிவானது. ஆனால், ஊரடங்குக்கு 10 நாட்களுக்கு  முன்பு  376 அடிதடி வழக்குகளும், 581 விபத்து வழக்குகளும் பதிவாகின. இந்த நிலையில்தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டது. 45 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் நடந்த குற்ற சம்பவங்கள் டாஸ்மாக் கடைகள் திறந்த ஒரே நாளில் 6 மடங்காக அதிகரித்தது. டாஸ்மாக் கடைகள் திறந்த நாளில் மட்டும் 1,102 குற்றங்கள் நடந்துள்ளன.

அடுத்த நாள் இந்த எண்ணிக்கை 2 மடங்காகிவிட்டது. 2050 விபத்து வழக்குகள் தமிழகம் முழுவதும் பதிவானது.  இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு அடுத்த நாளே விபத்து எண்ணிக்கை 167 ஆக குறைந்துவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என்று உத்தரவிட்டது.  இந்த உத்தரவு வந்த மறுநாள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறந்த அதே வேகத்தில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளும் அதிகரித்தன. அன்றைய தினம் 583 குற்ற வழக்குகளும் 396 விபத்து வழக்குகளும் பதிவாகின.

கடந்த சனிக்கிழமை ரங்கத்தில் மது போதையில் 4 பேர் சேர்ந்து  தங்களின் நண்பனை தாக்கி கொலைசெய்த சம்பவம் நடந்தது. திருச்சியில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் சங்கிலி கருப்பு என்பவர் அடித்து கொலையான சம்பவமும் நடந்தேறியது. மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பு நடந்த குற்ற சம்பவங்களும், விபத்துகளும் மதுக்கடைகள் திறந்தவுடன் 6 மடங்கு அதிகரித்துள்ளது மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரக்கும்  முறுக்கும்:
மூணு அவுன்சு உள்ளே இறங்கினால், குடிமகன்களுக்கு மூடு மாறி விடுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்றே தெரியாது. குடியால் குடைசாய்வது மட்டுமல்ல. குற்றங்களும் அதிகரிக்கின்றன. தமிழகத்தில் தினமும் சராசரியாக பதிவான வழக்குகள் பற்றிய புள்ளி விவரம்:

Tags : Accident ,Country bottle bottle heaven , Corona, curfew, murder, accident
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...