×

தமிழகத்தில் 5 கூடுதல் எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழக டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான  குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த சரவணகுமார் சென்னை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிஐடிக்கும், சென்னை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிஐடிவில் இருந்த சுப்பாராஜ் சென்னை தமிழக போலீஸ் அகாடமிக்கும், திருச்சி மாவட்ட தலைமையிடத்தில் இருந்த குணசேகரன் நாமக்கல் மாவட்ட தலைமையிடத்திற்கும், சென்னை க்யூ பிரிவு சிஐடியில் இருந்த மதிவாணன் வேலூர் மாவட்டம் தலைமையிடத்திற்கும், தஞ்சை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த ரவிச்சந்திரன் திருச்சி கமாண்டான்ட் ஒன்றாவது பட்டாலியன் கூடுதல் எஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : SPs ,Tamil Nadu Transfer: DGP Tripathi directive. ,DGP Tripathi , Tamils, SPs, Transfer, DGP Tripathi
× RELATED தமிழகம் முழுவதும் 16 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பியாக பதவி உயர்வு