×

மாற்றுத்திறனாளிகள் 31ம் தேதி வரை: அரசு ஆபிசுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு துறைகளிலும் உள்ள அரசு பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து மே மாதம் 17ம் தேதி வரை பணி மேற்கொள்வதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. தற்போது, வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களிலும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் மட்டும் தங்கள் அலுவலக பணிகள் மேற்கொள்வதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.


Tags : Government Office , Transformers, Tamil Nadu Chief Secretary Shanmugam
× RELATED தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு...