×

போச்சுடா... அமெரிக்காவிலும் அதே பிரச்னையா... பிறப்பு சதவீதம் கூடுமா, குறையுமா?கணக்கு போட்டு குழம்பும் ஆய்வாளர்கள்

பெய்ஜிங்: அமெரிக்காவின் குழந்தை பிறப்பு வளர்ச்சி விகிதம் குறித்த ஆவணங்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு விநியோகம் செய்யப்பட்ட 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் ஆய்வின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குழந்தை பிறப்பு சதவீதமானது ஒரு சதவீதம் குறைந்துள்ளது. இளவயது அம்மாக்கள் மற்றும் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் குழந்தை பெறுவதும் சரிந்துள்ளது. 2014ம் ஆண்டில் மட்டுமே குழந்தை பிறப்பு சதவீதம் அதிகரித்துள்ளது. 2007ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பிறப்பு விகிதமானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்த பின்னரும் கூட குழந்தை பிறப்பு விகித வீழ்ச்சியானது தொடர்ந்தது.
 
இதற்கு பல காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தாய்மைக்கான அணுகுமுறையில் ஏற்படும் மாற்றங்கள், சில பெண்கள்  மற்றும் சில தம்பதிகள் குழந்தை பிறப்பை தாமதப்படுத்துவது, குறைவான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்போக்கு, குறைந்த மற்றும் நிலையற்ற வருமானம், அதிக வாடகையில் குடியிருத்தல், குழந்தை பெறுவதில் தம்பதிகள் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவையும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு முக்கிய காரணிகளாகும்.
நோய் கட்டுப்பாடு மையத்தின் அறிக்கையில், 34 வயது வரையிலான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்துள்ளது. ஆனால், 40 வயது தொடக்கத்தில் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்துள்ளது.

 2019ல்19வயது பெண்களின் குழந்தை பிறப்பு விகிதமானது 5 சதவீதம் குறைந்துள்ளது. இது 1991ம் ஆண்டுக்கு பின் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகின்றது.
அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றெடுப்பது 32 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 37 வாரங்களுக்கும் குறைவான காலத்தில் பிறந்த குழந்தைகளின் சதவீதமானது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 10சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.  இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியது, போதுமான வருமானமின்மை, வேலையிழப்பு போன்ற காரணங்களால் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும், குழந்தை பிறப்பை தள்ளிபோடுவதற்கு வாய்புள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் குழந்தை பிறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு சாரார் தெரிவித்துள்ளனர். குடும்ப கட்டுபாடு மற்றும் கருக்கலைப்பு செய்வது என்பது மேலும் கடினமாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் பெண்கள் கருவுறுதலுக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்

Tags : US ,Accounting analysts , USA, Corona, curfew
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...