×

வறுமையில் வாடும் மகாபாரத நடிகர்

லூதியானா: இந்தி, பஞ்சாபி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், பிரபலமான மகாபாரத நடிகருமான சதீஷ் கவுல் வறுமையில் வாடும் தனக்கு மருந்து மற்றும் மளிகைப் பொருட்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.  ``பியார் தோ ஹோனா ஹி தா’’, ``ஆன்டி நம்பர் ஒன்’’, ``விக்ரம் ஆர் பீடல்’’ போன்றவை உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ் கவுல் (73). இவர் மகாபாரதத்தில் இந்திரன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது வறுமையில் வாடும் இவர் முதியோர் இல்லத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.

கடந்த 2015ம் ஆண்டு இவரது இடுப்பு எலும்பு முறிந்த பின்னர் படவாய்ப்பு இல்லாமல் தற்போது கடும் வறுமையில் உள்ளார். ஊரடங்கால் அவர் மேலும் பாதிக்கப்பட்டு பிறரிடம் கையேந்து நிலை உள்து.  இதுபற்றி சதீஷ் கவுல் கூறுகையில், `‘அன்றாட தேவைக்கே போராடும் நிலை உள்ளது. இதனால் சிலரிடம் உதவி கேட்டுள்ளேன்’’ என கூறினார்.


Tags : actor , Mahabharata
× RELATED நடிகர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை