×

சிஐஎஸ்எப்.யில் மார்ச் வரை டிரான்ஸ்பர் கிடையாது

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கபட்ட ஊரடங்கினால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வேறு பணியிடங்களுக்கு செல்வதில் இருக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு வரும் 2021 மார்ச் வரை பணியிட மாற்றங்களை மேற்கொள்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படையின் இயக்குனர் ராஜேஷ் ரஞ்சன் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று நேரத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் நிர்வாகம், செயல்பாடு, ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியிட மாற்றமில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உண்மையான தனிப்பட்ட காரணங்கள், மருத்துவம் உள்ளிட்ட நேர்மையான காரணங்களாக இருக்கும் பட்சத்தில் மேலதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் பணியிட மாற்றம் வழங்கப்படும். கொரோனா சூழலில் அரசுக்கு பணத்தை மிச்சப்படுத்தி கொடுக்க இந்தாண்டு பணியிட மாற்றம் அடுத்தாண்டு மார்ச் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : CISF , CISF, Transfer
× RELATED திருவாரூர் மத்திய பல்கலைக்கழக...