×

கேரளாவில் போக்குவரத்து கழகத்திற்கு கடும் நஷ்டம்

திருவனந்தபுரம்: பஸ் போக்குவரத்து தொடங்கிய முதல்  நாளில் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  முதல்நாள் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா,  கொச்சி உட்பட முக்கிய நகரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 7 மணி முதல்  இரவு 7 மணி வரை மட்டுமே பஸ்கள் ஓடின.  பெரும்பாலான பஸ்களில் கூட்டம்  மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக முதல் நாளிலேயே கேரள அரசு  போக்குவரத்துக் கழகத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.

முதல் நாளில் 2,12,310 கி.மீ. தொலைவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 35,32,465  மட்டுமே  வருமானம் கிடைத்தது. ஒரு கி.மீ.க்கு  28 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு போக்குவரத்துக் கழகம்  அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலத்தில் மட்டும் 16 லட்சமும்,  எர்ணாகுளம் மண்டலத்தில் 12.5 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ₹6  லட்சமும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.



Tags : Transport Corporation ,Kerala , Kerala, Transport Corporation
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...