×

திருவிக நகர் மண்டலத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலத்தில் நேற்று கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டேரி, பெல்லிடர் வில்லேஜ் நியூ பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்த 58 வயது நபருக்கு கடந்த 15ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்தார். அதில், இவருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை ஓட்டேரி மயானத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் மேற்பார்வையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த நபரின் தம்பி கடந்த 19ம் தேதி கொரோனா தொற்றால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஓட்டேரி கனகாம்பாள் லைன் தாசமகான் பகுதியை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 18ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 19ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை புளியந்தோப்பு ஹைதர் இஸ்லாமிய மயானத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

* புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவை சேர்ந்த 61 வயதுடைய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருக்கு, கடந்த 11ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, நேற்று முன்தினம் இரவு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடல் நேற்று புளியந்தோப்பு ஹைதர்  இஸ்லாமியர் மயானத்தில் மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தண்டையார்பேட்டை: ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் 45 பேர், கொத்தவால்சாவடி பெருமாள் கோயில் தெருவில் ஒருவர், மின்ட் தெருவில் 3 பேர், நாட்டு பிள்ளையார் கோயில் தெருவில் 2 பேர், ஆறுமுகம் முதலி தெருவில் 2 பேர், ராமகிருஷ்ணன் தெருவில் ஒருவர், கோவிந்தப்பன் தெருவில் ஒருவர், சுப்பிரமணி தெருவில் ஒருவர் உள்ளிட்ட 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரம்:  புது பெருங்களத்தூரை  சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்த மாதம் 6ம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு 9ம் தேதி ரத்த அழுத்தம்  அதிகமானாதால் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டது.

அதேபோல், மேற்கு தாம்பரம், சிடிஓ காலனியை சேர்ந்த 33  வயது டாக்டர் உட்பட 4 பேர், சேலையூர் அடுத்த மப்பேடு, அண்ணாதுரை தெருவை  சேர்ந்த 38 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர்:  செம்பியம் காவலர் குடியிருப்பை சேர்ந்த பள்ளி மாணவி, எஸ்எஸ்வி கோயில் தெருவில் 35 வயது பெண், திருவிக நகர் 9வது தெருவில் 57 வயது பெண், மதுரை சாமி மடம் பகுதியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, திருநாவுகரசு தெருவில் 70 வயது நபர், பெரவள்ளூர் ஜவஹர் நகர் 5வது தெருவில் சுகாதாரத்துறை ஊழியர் 57 வயது நபர், புளியந்தோப்பு குட்டி தம்புரான் தெருவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் 30 வயது நபர் என நேற்று ஒரே நாளில் திருவிக நகர் மண்டலத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட  பெண்ணுக்கு பிறந்த குழந்தை சாவு
சென்னையில் உள்ள ராயபுரம் அரசு மருத்துவமனையில் 47 கர்ப்பிணிகளும், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில்  34 கர்ப்பிணிகளும், திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் 23 கர்ப்பிணிகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணிகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சூளையை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 இவருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்தது. பன்னோக்கு மருத்துவமனையில் பரிசோதித்த போது குழந்தைக்கு நோய் தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதேப்போல், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில்  உள்நோயாளி மற்றும் வெளிநோயாளிகள் வருகையை பதிவு செய்யும் 45 வயது ஊழியர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,women , Thiruvika Nagar Zone, Corona, 3 killed
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...