சிறுமியிடம் சில்மிஷம்: கோயில் அர்ச்சகர் கைது

ஆலந்தூர்: உள்ளகரம் கிருஷ்ணா நகர் இணைப்பு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (59). சென்னை அண்ணாசாலையில் எல்ஐசி பின்புறம் உள்ள ஒரு அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார்.  இவர், நேற்று தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி ஓடிவந்த சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள்.

ஆத்திரமடைந்த பெற்றோர், சிவக்குமாரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சிவக்குமாரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More