×

நாகையில் அலை சீற்றம்: கடல் நீர் புகுந்து 1,500 ஏக்கர் பயிர் சேதம்

நாகை: நாகையில் கடல் அலை சீற்றம் காரணமாக கடல் நீர் புகுந்து 1500 ஏக்கர் பயிர் சேதமடைந்துள்ளது. அம்பன் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு  முதல் கடல் சீற்றமாக காணப்படுகிறது. வேளாங்கண்ணி  அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் நேற்று திடீரென கடல் நீர் புகுந்தது. இதனால் 1500 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், நிலக்கடலை, சவுக்கு, வெள்ளரிக்காய், கத்தரி, புடலை ஆகிய பயிர்கள் சேதம் அடைந்தது. கடல் சீற்றம்  காரணமாக நேற்று நாகை ஆரிய நாட்டு தெரு கடற்கரையில் 100 அடிக்கும் மேல்  கடல்நீர் வெளியேறி குளம்போல் மாறியது.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால் குறைந்த தூரம் சென்று மீன்பிடித் தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று  வந்தனர். புயல் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Tags : Wave outbreak ,Naga ,sea water Wave outbreak , Snake, wave rage, crop damage
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...