இந்தியாவில் விளையாட்டு நிகழ்வுகள் தொடங்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது விளையாட்டு ஆணையம்

டெல்லி: இந்தியாவில் விளையாட்டு நிகழ்வுகளை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசின் வழிமுறைகளை பின்பற்றவும், தனிமனித இடைவெளி, பயிற்சி பகுதிகளுக்கு வருவதற்கு முன்பு பரிசோதனை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களையும், அரங்குகளையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விளையாட்டு பயிற்சிகள் மற்றும் போட்டிகளை படிப்படியாக துவக்க சாய் எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக வழிகாட்டல் நெறிமுறைகளை அது வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் பயிற்சி ஒரு கட்டமாகத் தொடங்கும். விளையாட்டுகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் வெவ்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன. அதன்படி, தொடுதல் தேவையில்லாதவை, ஓரளவு தொடுதல், முழுமையாக தொடுதல் மற்றும் நீச்சல் என 4 விதமாக விளையாட்டுகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 4 வகைகளுக்கான பயிற்சிகளுக்கும் தனித்தனியாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படுவதாக சாய் தெரிவித்துள்ளது. அது போன்று விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியும் பகுதி பகுதியாக வழங்கப்படும் என்றும் வீரர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் சாய் பணியாளர்கள் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயிற்சி முடிந்து பயிற்சி மீண்டும் தொடங்குவதற்கு முன் மையங்களைக் கிருமி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories:

>