×

கர்நாடகாவில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு அரசு சார்பில் பரிசோதனைகள் நடத்தப்படாது என அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் போக்குவரத்தில் மேலும் சில தளர்வுகளை மக்களுக்கு அளித்துள்ளது. கர்நாடகாவில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு அரசு சார்பில் பரிசோதனைகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்கள், கிளம்பும் இடங்களில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படும். அதில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தனியார் வாகனங்களில் செல்வோருக்கு எவ்வித பரிசோதனையும் மேற்கொள்ளப்படாது என கர்நாடகா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : State ,Karnataka ,journey ,Agencies ,start ,passengers ,Karnataka Govt , Karnataka, Experiment
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...