×

புகார்கள் தொடர்ந்து வருவதால் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம்; காவல்துறை நடவடிக்கை

சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. திருத்தணிகாசலம் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் சென்னை மாநகர ஜவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக திருத்தணிகாசலம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி, தவறான தகவல்களை கூறி பொதுமக்களை குழப்புவதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் ஆறாம் தேதி திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்த போது, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி நோயாளிகளை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தார் போன்ற பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. இதனிடையே ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மனு தொடர்ந்தார். அதனையடுத்து அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட காவல்துறை தரப்பு, கொரோனா பதற்ற நிலையை லாபம் ஈட்டும் நோக்குடன் பயன்படுத்தி உள்ளார். ஆகவே ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும்.

தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பெற்றதாகக் கூறும் சான்றிதழ் போலியானது எனத் தெரிவித்தது. இதனையடுத்து அவரது ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வேறு விதமான நோய்களுக்கு மருந்து அளிப்பதாகக் கூறி இரண்டு நோயாளிகளை அவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளை பதிவு செய்தார்கள் தற்போது அவருக்கு தற்போது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருத்தணிகாசலம் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : doctor piracy Police action ,paranoia doctor ,pirithram police action , Complaints, pseudoscience, piracy, thug act
× RELATED விழுப்புரம் சிறுமி எரித்துக்...