×

அரசு செலவில் வெளிநாடு பயணங்கள், விருந்து நிகழ்ச்சிகளுக்கு தடை.. செலவுகளை குறைக்க தமிழக அரசு கையாளும் சிக்கன நடவடிக்கைகள்!! : அரசு ஊழியர்கள் கலக்கம்

சென்னை : கொரோனாவில் ஏற்பட்ட செலவீனங்களை ஈடு செய்ய பல்வேறு செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டது.  கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாட்டின் அனைத்து துறைகளும் இயங்க முடியமால், முடங்கிக் கிடக்கின்றன. இதனால், வர்த்தகம் மிகக் கடுமையாக குறைந்து, அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கிறது. இதன் விளைவாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சந்திக்க நேரிட்டுள்ளது.

அதிலும், மாநிலங்களின் நிலை சற்றே கூடுதல் மோசமானதாக இருக்கிறது. தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களுக்கு, மத்திய அரசு, இதுவரை அவற்றின் ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை வழங்காமல் இருக்கிறது.
ஏற்கனவே கொரோனா கோர ஆட்டத்தால் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நிலையில், நிலுவைத் தொகையும் இழுத்தடிப்புச் செய்யப்படுவதால் கூடுதல் சுமையைச் சந்திக்கும் நிலைக்கு மாநில அரசுகள் ஆளாக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிதி இழப்பை சமாளிக்க தமிழக அரசு  பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றவை பின்வருமாறு..

*அரசு விழாக்களில் சால்வை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

*தமிழக அரசு அலுவலங்கங்களுக்கான செலவுகளில் 20 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டுள்ளது

*மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவதை 50% குறைக்கப்பட வேண்டும்

*விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அரசு அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை.

*விளம்பரச் செலவகளை 25% குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

*அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.

*சுகாதாரம், காவல், தீயணைப்பு துறைகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு மட்டும் வாகனங்கள் வாங்க அனுமதி.

*அரசு அதிகாரிகளின் தினப்படி 25% குறைப்பு ;நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி

*சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி

*மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி

*அரசு செலவில் வெளிநாடு பயணத்திற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

*அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

* அரசு அலுவலகங்களில் புதிதாக பணியிடங்களை உருவாக்கவும் தடை விதிக்கப்படுகிறது.


Tags : trips ,servants ,banquet , Government expenditure, foreign trips, banquet, ban, cost, reduction, Tamil Nadu government, austerity, activities, civil servants
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...