×

பொன்னேரி அருகே விடுமுறை கால ஊதியம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு: துறைமுக வாயிலில் நிவாரண பொருட்களை வீசி பெண்கள் போராட்டம்

பொன்னேரி: பொன்னேரி அருகே விடுமுறை கால ஊதியம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக வாயிலில் நிவாரண பொருட்களை வீசி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் அதானி துறைமுகத்தில் அதே கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பணியாளர்கள் பலர் வேலைக்கு செல்லவில்லை. பணிக்கு செல்லாதவர்களுக்கு துறைமுக நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ஒப்பந்த பணியாளர்கள் நியாயம் கேட்க சென்ற போது அவர்களை அனுமதிக்காத நிர்வாகம் மிரட்டுவதாக கூறி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நிராம மக்கள் அதானி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை துறைமுக வாயிலில் வீசி எரிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்டுள்ள துறைமுக நிர்வாகம் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Tags : Ponneri ,women , Bonnery, holiday pay, protest
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு