×

உலகில் முதல்முறையாக ஆன்லைன் விசாரணை மூலம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை : நீதிமன்றம் அதிரடி!!

சிங்கப்பூர் : உலகில் முதல்முறையாக சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிக்கு, ஜூம் செயலி மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மலேஷியாவை சேர்ந்தவர் புனிதன் கணேசன் (37). அவர், கடந்த 2011ம் ஆண்டு நடந்த ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீதிமன்ற பணிகள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடக்கிறது. இந்த வழக்கும் ஜூம் செயலி மூலம், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விசாரணையில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு கருதி வழக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார்.ஆன்லைன் மூலமாக மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags : World ,trial ,convict ,death ,time , World, for the first time, online, trial, by, guilty, execution, court, action
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை