×

கொரோனாவால் பல கோடி தேக்கம் கைத்தறி சேலை உற்பத்தி நிறுத்தம்: கூலி வழங்க முடியாத பரிதாபம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் கைத்தறி சேலை உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. இங்கு காஞ்சிபுரம் பட்டு, சாப்ட் சில்க், கோரா காட்டன், லினன் காட்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான ரகங்களில் கைத்தறி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த இரண்டு மாதமாக ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டதோடு கைத்தறி சேலை தயாரிப்பாளர்களிடம் இருந்து சேலைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

இதன் காரணமாக, சேலை உற்பத்தி செய்து தரும் கைத்தறி நெசவாளர்களுக்கு உற்பத்தியாளர்கள் கூலி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கைத்தறி ரகங்களுக்கு தேவையான மூலப் பொருளான ஜரிகை குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து வராததால் இனி கைத்தறி சேலைகள் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கைத்தறி சேலை தயாரிப்பாளர்கள் வரும் மே 22ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு கைத்தறி சேலை உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர். அதுவரை கைத்தறி நெசவாளர்கள் தறி நெசவு செய்ய வேண்டாம் என்றும், பாவு வீசுபவர்கள் பாவு வீச வேண்டாம் என்றும், கைத்தறி ரகங்களுக்கு சாயம் போட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Corona , Multi-crore,stagnant, linen sacking, Corona
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!