×

பிரதமர் நரேந்திர மோடி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து; காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக சோனியா மீது வழக்கு பதிவு விடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மாற்று அவரது மகன் ஜெய்ஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததால் சோனியா காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பால் தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கொரோனா இந்தியர்களின் உடல் நலம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு அவசர நிலை அல்லது துயர சூழ்நிலையையும் கையாள்வதற்கான நோக்கத்துடன் இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில் கூடங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில் மே 11 அன்று பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, பி.எம்-கேர்ஸ் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கு டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக சோனியா மீது வழக்கு பதிவு விடப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 பிரிவுகளின் கீழ் மற்றும் 505 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் பிரவீன் கே.வி அளித்த புகாரில், காங்கிரஸ் கட்சி, ட்வீட் மூலம், இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக மோசமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் தூண்ட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வக்கீல் பிரவீன் கே.வி கூறியதாவது; ட்வீட் மற்றும் கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து இந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிதியுடன் பிரதமர் அனுபவித்து வருவதாகவும், வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்வதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இந்த கொரோனா தொற்று சூழ்நிலையில் இது இந்திய அரசுக்கு எதிரான தெளிவான செய்தி. இது தொடர்பாக நான் புகார் அளித்தேன். முதன்மை விசாரணையில், ஐ.என்.சி ட்விட்டர் கணக்கின் தலைவரான சோனியா காந்தி மீது சாகர் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

Tags : Narendra Modi ,Sonia Gandhi ,Congress , Prime Minister Narendra Modi, Twitter, Congress President, Sonia Gandhi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...