×

ரயில் பயணிகளுக்கு சீசன் டிக்கெட் பணம் திரும்ப கிடைக்குமா?: பாசஞ்சர் ரயில்களும் இயக்க வலியுறுத்தல்

நெல்லை: கடந்த 57 நாட்களுக்கும் மேல் ரயில் இயங்காததால் ரயில் பயணிகள் ஏற்கனவே எடுத்த சீசன் டிக்கெட் முன் பணத்தை திரும்ப தரவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே புலம்பெயரும் தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே முக்கிய வழித்தடத்தில் சிறப்பு சேவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களிலிருந்து வேலைக்கு செல்லும் பலர் 3 மாதம் முதல் 6 மாத வரை சீசன் டிக்கெட்டுகளை லட்சக்கணக்கான பயணிகள் முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்வது வழக்கம். பலர் டிக்கெட் எடுத்து சில நாட்கள் மட்டுமே பயணம் செய்த நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

கடந்த 57 நாட்களுக்கும் மேலாக ரயிலில் பயணம் செய்யாததால், இவர்களுக்கு உரிய சீசன் டிக்கெட் பணம் திரும்ப கிடைக்குமா அல்லது ரயில் மீண்டும் இயக்கப்படும் போது அடுத்து வரும் நாட்களில் இந்த சீசன் டிக்கெட்டை கூடுதல் நாட்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுமா எனவும் எதிர்பார்கின்றனர். இதனிடையே 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் போது தொலை தூர ரயில்கள் மட்டுமின்றி மாவட்டங்களுக்கு இடையே அல்லது உள்மாவட்ட அளவில் சாதாரண பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பாசஞ்சர் ரயில்களில் வழக்கத்தைவிட கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு இயக்குவதால் பொதுமக்கள் அச்ச உணர்வின்றி பயணிக்க முடியும் என கருதுகின்றனர்.

Tags : train passengers , Do train passengers ,season ticket refunds, Passenger trains , operate
× RELATED நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள்...