×

தென்காசி - நெல்லைக்கு அரசு ஊழியர்கள் ‘தொங்கல்’ பயணம் : கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் விபரீதம்

நெல்லை: தென்காசியில் இருந்து நேற்று நெல்லைக்கு இயக்கிய  பஸ்சில் இடமின்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசு ஊழியர்கள் தொங்கியபடி பயணித்தனர். எனவே கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அரசு அலுவலகங்கள் கடந்த 18ம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன. பணிக்கு வருவதற்கு வசதியாக அரசு ஊழியர்களுக்கு மட்டும் அரசு சிறப்பு பஸ்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. ஒரு பஸ்சில் 30 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில வழித்தடங்களில் அதிகளவில் அரசு ஊழியர்கள் ஏறி வருகின்றனர்.குறிப்பாக நெல்லையில் இருந்து வள்ளியூர் மார்க்கமாக நாகர்கோவில் செல்வதற்கும் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வருவதற்கும் பஸ்கள் இயக்கப்படாததால் இந்த பகுதி அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சங்கரன்கோவில், தென்காசி, தூத்துக்குடி மார்க்கத்தில் இருவழியிலும் ஏராளமான அரசு ஊழியர்கள் பணிக்கு வரவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக தென்காசியில் இருந்து நெல்லைக்கு நேற்று காலை புறப்பட்ட பஸ்சில் ஏராளமான அரசு ஊழியர்கள் பயணித்தனர். கல்வித்துறை அழைப்பின் பேரில் சில ஆசிரியர்களும், கல்வித்துறை அலுவலர்களும் அதிகளவில் பணிக்கு திரும்பினர்.

ஆனால் வந்த ஒரே பஸ்சில் இடம் பிடிக்க ஆண், பெண் அரசு ஊழியர்கள் போட்டி போட்டு ஏறினர். இடம் கிடைக்காதவர்கள் நின்ற படி பயணித்தனர். தொடர்ந்து பஸ் வந்த வழியிலும் பல ஊர்களில் அரசு ஊழியர்கள் ஏறியதால் வாசல் வரை தொங்கல் பயணம் ெசய்யும் நிலை ஏற்பட்டது. கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக அதிகபட்சம் ஒரு பஸ்சில் 30 பேர் மட்டுமே செல்லவேண்டும் என்ற அரசு உத்தரவிட்ட நிலையில் அதிக பயணிகள் வந்ததால் கூடுதல் பஸ் வசதியின்றி அனைவரும் ஒரே பஸ்சில் பயணிக்கும் துரதிருஷ்ட நிலை ஏற்பட்டது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெருங்கி நின்று பயணத்தை மேற்கொண்டனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், அரசு 50 சதவீத பணியாளர்கள் வர வேண்டும் என உத்தரவிட்ட அதே நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவில்லை. கடந்த 3 நாட்களாக அரசு ஊழியர்கள் வரும் வழித்தடங்களை ஆய்வு செய்து போதுமான பஸ்களை இயக்க வேண்டும். அதிக கூட்டம்  பஸ்சில் ஏறுவதால் ெதாற்று அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க கூடுதல் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க முன்வரவேண்டும் என்றனர்.

Tags : Tenkasi - Railway ,paddy field ,Tenkasi - Hanging Paddy to Railway Employees , Tenkasi - Railway,employees, hang paddy
× RELATED அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹7...