×

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தடுப்புகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்தி தனிக்கடைகள், தொழிற்சாலைகள், கட்டுமானப்பணிகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இந்நிலையில், தமிழகம் முழுவதும் மேலும் 34 வகையான கடைகளை திறக்க கடந்த 11ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை நகர பகுதிகளில் மின்னணு மற்றும் மின்சாதன பொருட்கள், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள், பெட்டிக்கடைகள், ஹார்டுவேர்ஸ், இருசக்கர, நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைகள், சூப்பர் மார்க்கெட், மளிகைக்கடைகள், டீ கடைகள், ஏசி வசதியில்லாத ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  இதனால், திருவண்ணாமலை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவால் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே சாலைகள் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தி வந்தனர். தற்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், நெரிசலை தவிர்க்க சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : city ,Thiruvannamalai , Removing barriers, avoid traffic congestion , Thiruvannamalai city, public expectation
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்