×

தர்மபுரியில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், மானாவரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. இம்மாவட்டம் தக்காளி, வெண்டை, கத்திரி, பூசணி, பப்பாளி, குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிப்பதில் தமிழகத்திலேயே முதலிடம் வகிக்கிறது. தர்மபுரி, பென்னாகரம், காரிமங்கலம் ஒன்றியங்களில் வெண்டைக்காய் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இண்டூர், கிருஷ்ணாபுரம், செம்மாண்டகுப்பம், பாலக்கோடு, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி ஆகிய மொத்த வியாபார மண்டிகளில், வெண்டைக்காய்களை விவசாயிகள் மொத்தமாக விற்பனை செய்கின்றனர். இது கேரளா மற்றும் பெங்களூருக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

 தற்போது கோடை மழை பெய்துள்ளதால், மாவட்டம் முழுவதும், வெண்டை விளைச்சல் அதிகரித்துள்ளது. தர்மபுரி அடுத்த சோகத்தூர் பகுதியில், தினமும் வெண்டைக்காய் அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சாதாரண நாட்களில் 200 கிலோவும், சீசன் காலங்களில் தினமும் 500 கிலோ வரையும் வெண்டைக்காய் மகசூல் கிடைக்கும். இதனை கேரளா, பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், விளைச்சல் அதிகரிப்பால், தற்போது வெண்டைக்காய் விலை குறைந்துள்ளது,’ என்றனர்.

Tags : Dharmapuri , Bronze, yield, Dharmapuri
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்