×

மின் ஊழியர் பலி

ஆலந்தூர்: கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர், மடிப்பாக்கம் மின்பகிர்மான அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்துவந்தார். நேற்று காலை மடிப்பாக்கம் அய்யப்பா நகர் பகுதியில் மின்தடையை சரிசெய்ய அங்குள்ள மின்கம்பத்தில் ஏறினார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.  தகவலறிந்த மடிப்பாக்கம் மின்வாரிய  உதவி மின்  பொறியாளர் பிரவீன், சம்பவ பலத்த காயமடைந்த வெங்கடேசனை  பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.


Tags : Electrical worker ,kills
× RELATED நாய் துரத்தியதால் சாலையோர கிணற்றில் விழுந்து மின் ஊழியர் பரிதாப பலி