×

டாஸ்மாக் கடை திறப்பால் விபரீதம்: போதை தகராறில் வாலிபர் குத்தி கொலை: ஒரே வாரத்தில் 2 சம்பவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரை சேர்ந்தவர் அஜித் (25). நேற்று முன்தினம் இரவு அஜித், தனது நண்பர்கள் 4 பேருடன் ராஜகுளம் செல்லும் வழியில் மது அருந்தினார். அப்போது போதை தலைக்கேறியதும், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நண்பர்கள் 5 பேரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், கத்தியால் குத்தியதில் அஜித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி கலைச்செல்வன், தாலுகா இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏனாத்தூரை சேர்ந்த வெங்கடேசன், காக்கா சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் கைலாசநாதர் கோயில் தெருவில் காய்கறி வியாபாரிகளுக்கு இடையே போதையில் ஏற்பட்ட தகராறில், ரஜினி என்ற வியாபாரி சக நண்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல், வாலிபர்களுக்கு இடையில் போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூதாட்டி பலி: காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். பள்ளி ஆசிரியர். இவரது தாய் நாகம்மாள். மகேஸ்வரன், இதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்காக மனையின் எதிரில் மணல் மற்றும் ஜல்லி குவித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த மின்வாரியத்தில் வேலை செய்யும் சரவணன் என்பவரது குழந்தைகள், மணல் மீது விளையாடினர். இதை பார்த்த மகேஸ்வரனின் தாய் நாகம்மாள், சிறுவர்களை திட்டியுள்ளார். இதனை சிறுவர்கள், தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைதொடர்ந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர் சரவணன் உள்பட சிலர், நாகம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர் சரவணன், நாகம்மாளை கீழே தள்ளினார். இதில், நாகம்மாளுக்கு பின்மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து, சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்வாரிய ஊழியர் சரவணனை கைது செய்தனர்.

Tags : Task Shop Opening Accident: Drug Debate Murder: 2 ,disaster ,drug dispute ,death , Task shop, drug addict, teenager stabbed to death
× RELATED பீகாரில் இன்று இடி, மின்னல் காரணமாக 20...