×

வெயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி சாவு

புழல்: செங்குன்றம் திருவள்ளூர் கூட்டுச்சாலை எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று மதியம் 2 மணியளவில் கொளுத்தும் வெயிலில் சுமார் 65 வயதுள்ள மூதாட்டி நடந்து சென்றார். அப்போது மூதாட்டி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.   தகவலறிந்த செங்குன்றம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மூதாட்டி பச்சை கலரில் ஜாக்கெட், சிவப்பு மஞ்சள் கலந்த கட்டம் போட்ட புடவை அணிந்திருந்தார். அவர் செங்குன்றம் மற்றும் பாடியநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாமா அல்லது சொந்த மாநிலத்திற்கு நடக்க முயன்ற வடமாநில தொழிலாளியா என செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Muthatti , sun, godmother Death
× RELATED சூரியன் வழிபடும் வரதராஜ பெருமாள்