×

திருப்போரூர் ஒன்றிய கிராமங்களில் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தையூர், பையனூர், சிறுதாவூர் ஆகிய ஊராட்சிகளில் நடக்கும் திட்டப்பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார். தையூர் ஊராட்சியில் நடைபெறும் 1.2 கோடியில் சாலைப்பணிகள்,17 லட்சத்தில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, 73 லட்சத்தில் பல்வேறு கட்டிடப் பணிகள், பையனூர் ஊராட்சியில் சினிமா நகரத்திற்கு குடிநீர் சப்ளை வழங்க 15 லட்சத்தில் குடிநீர் பைப்லைன் திட்டப் பணிகள்உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அவருடன், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், கார்த்திகேயன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Thirupporeur, Union Villages, Collector
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...