×

கேரளாவில் அரசு பஸ் ஓட துவங்கின ஆந்திராவில் இன்று முதல் ஓடும்

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று காலை முதல் அரசு பஸ்கள் குறைந்த எண்ணக்கையிலான பயணிகளுடன் இயங்க தொடங்கின. கேரளாவில்  கொரோனா நோய் தீவிரம் உள்ள பகுதிகள் தவிர மற்ற இடங்களில் லாக்-டவுன்  நிபந்தனைகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிகள் ஓடத்தொடங்கின.  நேற்று காலை 7 மணி முதல்  திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா,  திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பஸ்  போக்குவரத்து தொடங்கியது.  பொதுமுடக்கம் முடியும்வரை பஸ்களில் 50 சதவீத  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச கட்டணம் 8ல் இருந்து  16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

காலை 7 முதல் இரவு 7 மணிவரை  மாவட்டத்திற்குள் மட்டுமே இந்த பஸ் போக்குவரத்து நடைபெறும். ஒரு பஸ்சில்  23 முதல் அதிகபட்சமாக 27 பயணிகள் மட்டுமே  அனுமதிக்கப்படுவர். 2 பேர்  அமரும் இருக்கைகளில் ஒருவரும், 3 ேபர் அமரும் இருக்கைகளில் 2 பேரும்   அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கேரளாவில் சலூன் கடைகள், அழகு  நிலையங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் திறந்து  ெசயல்படுகின்றன. இதுபோல லாட்டரி விற்பனை கடைகள் இன்று முதல் தொடங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆந்திராவில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாமல் இன்று முதல் சமூக இடைவெளி பஸ் இயக்கப்படும் என நிர்வாக இயக்குனர் மடிரெட்டி பிரதாப் தெரிவித்தார்.

விஜயவாடாவில் மாநில அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் மடிரெட்டி பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் வியாழன் முதல் பஸ்கள் இயக்கப்படும். முதல் பஸ் சேவை காலை 7 மணிக்கு இயக்கப்படும். இதில் மாநிலம் முழுவதும் உள்ள எந்த மாவட்டத்தில் இருந்து எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். பஸ் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், கோடைகாலத்தை கருத்தில் கொண்டு இரவிலும் பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இரவு 7 மணிக்கே பயணிகள் பஸ் நிலையத்திற்கு வர வேண்டும்.

வெளி மாநில பஸ் சேவை இயக்குவது தொடர்பாக அந்தந்த மாநில ஒப்புதலுக்காக கடிதம் எழுதப்பட்டுள்ளது. பஸ்சில் 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அவசர சேவைகள், மருத்துவ பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வயதுடையவர்களின் அனுமதிக்கு எந்த விதிவிலக்கும் இல்லை. தற்போது 70 சதவீதம் பஸ் சேவைகள், அதாவது 1683 பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்றார்.


Tags : state government ,Andhra Pradesh , Kerala, State Bus, Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி