×

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முடி திருத்துவோருக்கு தலா 30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊரடங்கால் தொழில் செய்ய முடியாமல் கஷ்டப்படும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு முடி திருத்துவோர் யூனியன் தலைவர் எம்.முனுசாமி தாக்கல் செய்த மனுவில், “தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கள் யூனியனில் 25 ஆயிரம்பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள் மாதம் ரூ.15 ஆயிரம்வரை வருமானம் ஈட்டிவந்தனர். திடீரென கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சலூன் கடைகள் முழுவதும் மூடப்பட்டன.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சலூன் கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக எங்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படுகின்றன. எனவே, முடி திருத்தும் தொழில் செய்து வருபவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அரசு பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



Tags : hair loss victims ,Case , Tamil Nadu, Curfew, Icord, Tamil Nadu Government
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...