×

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனே மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக 734 மீனவர்கள் ஈரான் நாட்டு கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர். கொரோனாவால் அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் சிக்கி பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 3 மாதங்களாக, சரியான உணவும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.  எனவே ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை உடனடியாக மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Jawahrullah ,fishermen ,Iran Fishermen ,Iran , Iran, Fishermen, Jawahirullah
× RELATED நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு...