×

மீண்டும் காதலில் விழுவேன்: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்

லண்டனை சேர்ந்த காதலன் மைக்கேல் கோர்செல்லை திடீரென்று பிரிந்தார் ஸ்ருதிஹாசன். பிறகு ஆல்பத்துக்கு இசை அமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என்று தன் பணியை விரிவுபடுத்திக் கொண்ட அவர், தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டு–்ம் நான் காதலிப்பேன் என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு செல்ல முடியாததை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆனால், இது எனக்கு மட்டும் நேர்ந்த பிரச்னை கிடையாது. உலகிலுள்ள அனைவருக்கும் ஏற்பட்ட பிரச்னை. இனி இந்த பிரச்னையில் இருந்து எப்படி தப்பித்து வெளியே வருவது என்றுதான் யோசிக்க வேண்டும்.

நாள் முழுவதும் பிசியாக இருந்துவிட்டு, இந்த லாக்டவுனில் என்ன செய்கிறேன் என்று கேள்வி கேட்பவர்கள் அதிகம். வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்ட நான், தினமும் யாருடைய உதவியும் இல்லாமல் சமையல் செய்கிறேன். வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் நான்தான் செய்கிறேன். இசை ரிகர்சல் செய்வது, ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது, பாடுவது, பியானோ வாசிப்பது என்று என் நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மீண்டும் யோசித்து பார்க்கிறேன். எங்கே என் தவறு இருக்கிறது என்று உணர்ந்து, அதை எப்படி திருத்திக்கொள்ள வேண்டும் என்று எனக்கு நானே அட்வைஸ் செய்துகொள்கிறேன்.

ஊரடங்கு முடிந்த பிறகு நிறையபேர் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நானும் கடந்த கால சம்பவங்களில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன். ஏற்கனவே ஒருவருடன் எனக்கு இருந்த நட்பு முறிந்துவிட்டது. அதற்காக நான் வருத்தப்பட்டது இல்லை. என்றாலும், மீண்டும் நான் காதலிப்பேன். என்னை புரிந்துகொள்ளும் அந்த நட்புக்காக காத்திருக்கிறேன். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள். எனவே, என்மீது அதிக அன்பு செலுத்துபவரை நான் சந்திக்கும் வாய்ப்பு அமையும் என்று உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.



Tags : Sruthihasan , Sruthihasan
× RELATED திருமணம் என்றாலே பயம்: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்